உள்ளூர் செய்திகள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது
- ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
- அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
இந்நிலையில் கச்சத்தீவு- தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் 15 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் 2 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லை தாண்டி வந்ததாக கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.