உள்ளூர் செய்திகள்

நாகை புதிய பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்.

நாகை புதிய பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்; பயணிகள் கடும் அவதி

Published On 2023-05-25 08:17 GMT   |   Update On 2023-05-25 08:17 GMT
  • பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் நிரம்பி பஸ் நிலையம் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர்.

நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளை யத்தில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கலான வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை, மற்றும் ஆன்மீக தளங்களுக்கு வரக்கூடிய பஸ்கள் அனைத்தும் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

அதே போன்று சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்ககளாக பஸ் நிலையம் அருகே ஓடக்கூடிய பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் நிரம்பி பஸ் நிலையம் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சில இடங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு பயணிகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.

எனவே சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் உடனடியாக கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

உடனடியாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News