உள்ளூர் செய்திகள்

மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

சீர்காழியில், மாநில செயற்குழு கூட்டம்

Published On 2023-11-22 09:40 GMT   |   Update On 2023-11-22 09:40 GMT
  • பள்ளி ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு தனிதேர்வு வைக்க வேண்டும்.
  • புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும்.

சீர்காழி:

சீர்காழி பெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில பொதுசெயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி யினுடைய உடற்கல்வி இயக்குனர் எஸ்.முரளிதரன் வரவேற்றார்.

உடற்கல்வி இயக்குனர்கள் சம்பந்தம் ,செல்வ கணேசன், எஸ்.ரவிச்சந்திரன், உடற்கல்வி ஆசிரியர் டி.ஆர்.செந்தில் குமார் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக பெஸ்ட் கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.எஸ்.என். ராஜ்கமல் சிறப்புரையாற்றினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஆண்டு தோறும் நடைபெறக்கூடிய ஆண்டு தேர்வில் மாணவர்களுக்கு உடற்கல்விக்கு என தேர்வு தனியாக வைக்கப்பட வேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள தொகுப்புகுதிய அடிப்படையில் பணியாற்றக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்கள் நிரந்தர பணி அளிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் 200 உடற்கல்வி துறை ஆசிரியர்களை புதிதாக பணி நியமனம் தமிழக அரசால் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றி தமிழக அரசின் கவனத்திற்கு அனுப்பிவைத்திட முடிவு செய்யப்பட்டது.

ஏற்பா டுகளை திருவெண்காடு சு.சு.தி ஆண்கள் பள்ளியினுடைய உடற்கல்வி ஆசிரியர் எஸ்.செல்லதுரை செய்திருந்தார்.

முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News