நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கம் சார்பில் மாநில அளவிலான கோடைகால கபடி பயிற்சி முகாம்
- நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்கம் சார்பில் மாநில அளவிலான கோடைகால கபடி பயிற்சி முகாம் நடைபெற்றது.
- முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புதுவாழ்வு சங்க விளையாட்டு துறை சார்பில் 5-ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்களுக்கான கோடை கால இலவச பயிற்சி முகாம் கடந்த 1-ந்தேதி தொடங்கி 10-ந் தேதி வரை நடைபெற்றது.
நிறைவு விழாவில் அமைச்சரும், தூத்துக் குடி மாவட்ட அமெச்சூர் கழக தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரர் களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசியதாவது:-
கபடி விளையாட்டில் சாதனை படைத்தது சன் பேப்பர் மில். அர்ஜுனா விருது பெற்ற வீரர்கள் கன்னியாகுமரி ராஜரத்தினம், மணத்தி கணேசன் ஆகியோரை உலகிற்கு அடையாளப்படுத்தியது கபடி.
விளையாட்டு அகடமி விரைவில் இப்பகுதியில் தொடங்கப்படும். மேலும் கல்லூரி பள்ளி மாணவ- மாணவிகள் தாங்கள் படிப்பதற்கும் அவர்களுக்கு தேவையான உணவு வகைகள் கிடைப்பதற்கு உரிய வழிமுறைகள் பெற்றுத் தரப்படும். அரியானாவில் எப்படி வீரர்கள் உருவாக்கப்படுகிறார்களோ அதே போன்று தமிழகத்திலும் விளையாட்டு வீரர்கள் உருவாக்கப்படுவார்கள்.
விளையாட்டு வீரர்கள் தங்களது முயற்சியை கை விட்டு விடக்கூடாது. விளையாட்டு போதைப் பொருட்களிலிருந்து அடிமையாவதை தடுக்கும். எனவே அனைவரும் சீரிய முறை யில் பயிற்சிகள் மேற்கொண்டு விளையாட் டில் மென் மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்விற்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கி பேசியதாவது: -
கபடி விளையாட்டு தேசிய அளவில் 1972-லும் உலக அளவில் 2004-லும் இந்திய அளவில் மகளிர் 2005-லும் சாதனை படைத்துள்ளனர். விளையாட்டு வீரர்கள் சாதனை படைப்பதற்கு மூன்று முக்கிய கோட்பாடுகளை கையாள வேண்டும். ஒன்று ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ வேண்டும் தாங்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை அதன் நுணுக்கங்களை கற்று ஒழுக்க நெறியுடன் வாழ வேண்டும்.
இரண்டாவது தாயையும் தகப்பனையும் கனம் பண்ண வேண்டும். கனம் பண்ணும் போது உங்களுக்கு சந்தோஷம், சமாதானம் கிடைக்கும். மூன்றாவது உண்மையுள்ள மனிதன் உயர்த்தப்படுவான் என்று வேத வசனத்தின்படி உண்மையுடன் நடக்க வேண்டும். இந்த மூன்று கோட்பாடுகளை நீங்கள் கை கொண்டு நடந்தால் விளை யாட்டுத்துறையில் நீங்கள் உலகளவில் சாதிக்கலாம் என்று பேசினார்.
விழாவில் முகாம் பொறுப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். தூத்துக்குடி மாவட்ட அமைச்சர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளர் ஜிம்ரீவ்ஸ், முகாம் ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் கணேசன், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார்,விளையாட் டுத்துறை பொறுப்பாளர் எட்வின், திமுக மாநில மாணவரணி இணை செயலாளர் எஸ்.ஆர். எஸ். உமரிசங்கர், ஆழ்வை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், கபடி கந்தன், வழக்கறிஞர் கிருபாகரன்,
தொழிலதிபர் ஜி ஆர் ரமேஷ் கிருஷ்ணன் டாக்டர் அன்பு ராஜன் நடுவர் குழு சேர்மன் கண்ணன் கன்வீனர் நடுவர்கள் மைக்கேல், அசோக்,அர்ஜுனன் பொன்னையா சாமுவேல், ஜானகிராமன், வேல்மணி, சிவா,மந்திரம், தமிழ்மணி, அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயேசுவிடுவிக்கிறார் அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் அன்புராஜன் நன்றி கூறினார்.
முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்டம் அமெச்சூர் கபடி கழகமும், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும் புதுவாழ்வு சங்கமும் இணைந்து செய்திருந்தனர்.