உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை -மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யான் பேட்டி

Published On 2022-10-01 09:51 GMT   |   Update On 2022-10-01 09:51 GMT
  • கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது
  • சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஊட்டி 

மீன் பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள துறை மத்திய இணை மந்திரி சஞ்சீவ் பல்யான் நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

நான் தற்போது தான் முதல்முறையாக நீலகிரி மாவட்டத்திற்கு வந்துள்ளேன். கடந்த கடந்த 2020-ம் ஆண்டு மீன்வளத்துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் ரூ.1,565 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. சென்னை துறைமுக பராமரிப்பு பணிக்காக ரூ.98 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முழுவதும் மத்திய அரசின் நிதி ஆகும்.

இதேபோல் மத்திய அரசு நிதி மூலம் சென்னையில் கடல்வாழ் தாவரங்களுக்காக புதிய பூங்கா அமைக்கப்பட உள்ளது. கொரோனா காலகட்டத்தின் போது ஒரு லட்சத்து 75 ஆயிரம் மீனவர்களுக்கு ரூ.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்தியாவில் உள்ள மிகப் பெரிய தொண்டு நிறுவனமாகும். மக்கள் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உழைப்பதால், அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

படுகர் இன மக்களை எஸ்.டி. பிரிவில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி தேயிலை விலை குறைவாக இருப்பதால் பாதுகாப்பு துறை மூலம் தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் செக்சன் பிரிவு பகுதியில் உள்ள 7000 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு இல்லாமல் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிற்கும் மின் இணைப்பு, கழிப்பறை, கியாஸ் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார். எனவே இந்த பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆ.ராசா எம்.பி.யின் பேச்சு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட பா.ஜ.க. தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிர்வாக ஆலோசனை கூட்டத்தில்மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நளினி, குமார், மண்டல தலைவர் பிரவீன், மண்டல பொதுச்செயலாளர் சுரேஷ், கார்த்தி, ராஜேந்திரன், மற்றும் கதிர்வேல், பாலகுமார், முருகேசன், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News