உள்ளூர் செய்திகள்

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

எச்சரிக்கையை மீறி கடலூர் பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்ட10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை

Published On 2023-11-18 09:09 GMT   |   Update On 2023-11-18 09:09 GMT
ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன‌.

கடலூர்:

கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்குள் இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கரம் வாகனம் செல்வதற்கு அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்திருந்தனர். இதனை மீறி கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்லக்கூடிய பொது மக்களை கடும் எச்சரிக்கை செய்து அனுப்பி வந்ததோடு , போலீசார் அபராதம் விதித்து வந்தனர்.ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் இன்று காலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், செந்தில்கு மார், தலைமை காவலர்கள் குமரேசன், வினோபாலன், போலீஸ்காரர் சுபாஷ் ஆகியோர் கடலூர் பஸ் நிலையத்தில் போக்குவர த்துக்கு இடையூறாகவும், போலீசார் எச்சரிக்கை செய்ததை மீறியும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 மோட்டார் சைக்கிளை போலீசார் வாகனங்களில் ஏற்றி கொண்டு சென்றனர். மேலும் கடலூர் பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனம் மற்றும் கார் போன்ற வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கடும் எச்சரிக்கை செய்தனர்.

இதனை தொடர்ந்து ெரயில்வே சுரங்கப்பாதை மேல் புறத்தில் வாகனங்கள் செல்லும் வழியில் போக்குவரத்து இடையூறாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தாங்கள் கொண்டு வந்த வாகனத்தில் ஏற்றி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News