உள்ளூர் செய்திகள்
நாகை துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
- காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும்.
- 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
தென் கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலானது நாளை மே 11 ம் தேதி காலை கடுமையான சூறாவாளி புயலாக மாறும் எனவும் இது பங்களாதேஷ் மியான்மர் இடையை மே 14 ம் தேதி கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தூரத்தில் புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில் நாகை, காரைக்கால், சென்னை, கடலூர், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.