உள்ளூர் செய்திகள்

பைபர் படகுகள் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை எதிரொலி: வேதாரண்யத்தில், 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2023-05-06 10:02 GMT   |   Update On 2023-05-06 10:02 GMT
  • 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
  • 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வேதாரண்யம்:

வங்க கடல் பகுதியில் புதிய மோக்கா புயல் உருவாக இருப்பதால் கடலில் பலத்த காற்ற வீசகூடும் என்பதால் மறு அறிவிப்பு வருவரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம் , வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

கடலுக்கு செல்லாததால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வேலை இழந்து உள்ளனர்.

Tags:    

Similar News