திருச்செங்கோட்டில் ஒரே நாளில் 20 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்
- நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர்.
- திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு நாய்கள் கடித்து குதறி யுள்ளன.
திருச்செங்கோடு:
தற்போது நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர். தெருக்களின் குறுக்கே திடீரென நாய்கள் கூட்டமாகஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு அதுவும் வேகமாக சாலையை கடப்பதால் இருசக்கர வாகனஓட்டிகள் நாய்கள் மீத மோதிவிழுந்து காயமடைவது தொடர்ந்து நடந்து வந்தது.
திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு
நாய்கள் கடித்து குதறி யுள்ளன. காயம் அடைந்த வர்களில் நாமக்கல் ரோடு சஞ்சய், ஆயிரத்தா குட்டை தரணி, எஸ்.என்.டி.ரோடு சின்னதம்பி, கொல்லப்பட்டி உஷா, ஏ.கே.இ. ரோடு காவியா, அம்பேத்கார் நகர் பகுதியைசேர்ந்த சுசிலா , ராஜம்மாள், முத்துலட்சுமி, நேசமணி உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் சிலர் ஈரோடு தனியார் மருத்துவமனை சென்றுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யவும் நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்த வருகின்றனர். நாய்க்கடி மருந்துகள் இருப்பில உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.