உள்ளூர் செய்திகள்

ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.,

வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலி வீடியோக்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்-ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-03-04 09:29 GMT   |   Update On 2023-03-04 09:29 GMT
  • உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், தமிழகத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
  • இங்கே பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு வருகிறார்கள்.

நெல்லை:

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

பீகார், மேற்கு வங்கம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள், தமிழக த்தில் பல்வேறு ஊர்களில் பணிபுரிந்து வருகிறார்கள். கிராமங்கள் வரையிலும் அவர்கள் பரவி, பணியாற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள தொழில்துறைகளில் அவர்களது பங்களிப்பு கணிசமாக இருக்கிறது. பெரிய தொழிற்சா லைகளில் தொடங்கி சலூன் கடை வரையில் அவர்கள் பணியாற்றிக் கொண்டி ருக்கிறார்கள்.

இவர்களால் தமிழகத்தில் தொழில் உற்பத்தி பெருகி கொண்டிருக்கிறது. இங்கே பணிபுரியும் ஒவ்வொரு வட மாநில தொழிலாளர்களும் நல்ல சம்பளம் பெற்று, தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் சிலர் உள்நோக்கத்துடன் பரவ விட்டுள்ளனர். இது இங்கே பணிபுரிந்து வரும் வட மாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 30 ஆண்டு களாகவே வட மாநில தொழிலாளர்கள் இங்கே பணிக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு நல்ல சம்பளம், சாப்பாடு, தங்குவதற்கு பாதுகாப்பான இடம் எல்லாம் தரப்படுகிறது. அவர்கள் இங்கே பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் ஒரே மாநிலம், நம் தமிழகம் தான்.

ஆனால், தற்போது வடமாநில தொழி லாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாதது போன்ற தவறான பிம்பத்தை சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் தமிழகத்தின் முன்னேற்றத்தை தடுக்கப் பார்க்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரவவிட்டு இருக்கிறார்கள்.

இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயல். அத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது தமிழக காவல் துறையும், தமிழக அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

Tags:    

Similar News