உள்ளூர் செய்திகள்

கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம், பொங்கல் மண்பானை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.

கலெக்டரிடம், மண்பானை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

Published On 2023-01-10 08:29 GMT   |   Update On 2023-01-10 08:29 GMT
  • கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை ஆகியவற்றை கலெக்டரிடம் கொடுத்து விழிப்புணர்வு.
  • அனைவரும் மண்பானை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும்.

நாகப்பட்டினம்:

தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு மக்கள் அனைவரும் மண்பானையில் பொங்கலிட வலியுறுத்தி திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்வி நிறுவனம் மற்றும் மகரிஷி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ-மாணவிகள் இணைந்து நேற்று மண்பானை, கரும்பு, மஞ்சள், இஞ்சி கொத்து, அகப்பை ஆகியவற்றை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் கல்லூரி இயக்குநர் பேசுகையில், நமது முன்னோர்கள் மண்பானையில் பயன்படுத்தி உணவுகள் உண்டதால் அவர்கள் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வமாக வாழ்ந்து வந்தனர் என்றார்.

கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசும்போது, தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த விழிப்புணர்வு மிகவும் ஏற்றதக்க வகையில் இருக்கிறது. மண்பானை செய்யக்கூடிய தொழிலாளர்கள் நலமும் வளமும் பெற அனைவரும் மண்பானையினை பயன்படுத்தி பொங்கலிட வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவர் தாளாளர் வெங்கட்ராஜுலு, செயலர் சுந்தர்ராஜீ, முதன்மை செயல் அதிகாரி நிர்மலா ஆனந்த், இயக்குனர் விஜயசுந்தரம், நிர்வாக அலுவலர் சீதா கோபாலன், முதல்வர்கள் சிவகுருநாதன், கலைமகள், சுமித்திரா மற்றும் துறை தலைவர்கள் ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News