உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட முயன்ற மாணவர்களை படத்தில் காணலாம்.

பஸ் வசதி கேட்டு மறியலுக்கு முயன்ற மாணவர்கள்

Published On 2023-11-08 07:24 GMT   |   Update On 2023-11-08 07:24 GMT
  • வல்லம்பட்டியிலிருந்து வலசு கிராமம் வரை பஸ் வசதியை நீட்டித்திடக் கோரி குரும்பபட்டியில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  • அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

குள்ளனம்பட்டி:

சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி ஊராட்சி வல்லம்பட்டியிலிருந்து வலசு கிராமம் வரை பஸ் வசதியை நீட்டித்திடக் கோரி குரும்பபட்டியில் கடந்த செப்டம்பர் 27-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் ஆய்வாளர் ஜெயச்சந்திரன்,வி.ஏ.ஓ செல்வம்,இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன்,ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் வருகிற 14-ந்தேதி போக்குவரத்து கழக அதிகாரிகளோடு அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து பஸ் இயக்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

Tags:    

Similar News