தேசிய இளைஞர் திருவிழாவிற்கு மாணவர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி
- மாவட்ட அளவிலான மாணவர்கள் குழுவிவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தது.
- முடிவில் தமிழ்துறை தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
தஞ்சாவூர்:
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேசிய இளைஞர் திருவிழா டெல்லியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு மாணவர்கள் குழு கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். அதன் முன்னேற்பாடாக திருச்சிராப்பள்ளி பாரதி தாசன் பல்கலைக்கழகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட அளவிலான மாணவர்கள் குழுவிவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டியன் முன்னிலை வகித்தார். மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, துணை முதல்வர் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணி திட்ட குழும இயக்குநர் செந்தில்குமார், திருச்சிரா ப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குமி பிரபா அம்மையார் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்வதில் நெறியா ளர்களாக செயல்பட்டனர்.இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னதாக தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலரும், தஞ்சாவூர் மாவட்ட தேசிய இளைஞர் திருவிழாவிற்கான சிறப்பு அலுவலருமான சந்தோஷ்குமார் அனை வரையும் வரவேற்றார்.
முடிவில் தமிழ்துறை தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் கண்ணன் செய்திருந்தார்.