உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் இலக்கை அடையும்வரை தன்னம்பிக்கையுடன் போராட வேண்டும்

Published On 2023-10-25 09:08 GMT   |   Update On 2023-10-25 09:08 GMT
  • புத்தக திருவிழாவில் பேராசிரியை பர்வீன்சுல்தானா அறிவுரை
  • வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கோலாட்டம் உள்பட பல்ேவறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நீலகிரி புத்தக திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

நீலகிரி புத்தக திருவிழாவின் 3-வது நாளில் 278 மாணவர்கள் உள்பட 1403 பேர் கலந்து கொண்டு ரூ.79,585 மதிப்புள்ள புத்தகங்களை வாங்கி சென்றனர்.

இந்த நிலையில் நீலகிரி புத்தக திருவிழா 4-ம் நாள் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சி.எஸ்.ஐ ஜெல் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், கோலாட்டம், சமூகவிழிப்புணர்வு நாடகம் மற்றும் பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து பிரபல பேச்சாளர் பேராசிரியை பர்வீன் சுல்தானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-

மாணவ-மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றால் புத்தக ங்களை படிக்க வேண்டும். பிள்ளைகளிடம் பெற்றோர் அன்புகாட்ட வேண்டும். ஆசிரியர்கள் படிப்பு மட்டுமின்றி நற்பண்புகள் குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்.

குழந்தைகள் எண்ணிய இலக்கை எட்டும்வரை தன்னம்பிக்கையுடன் பாடுபட வேண்டும். வெற்றி, தோல்வி என கருதாமல் போட்டிகளில் பங்கேற்க வேண்டும். அதுவே உங்களின் முதல் வெற்றி என நினைக்க வேண்டும். மனஉறுதியுடன் இலக்கை எட்டும்வரை விடாமுயற்சியுடன் போராட வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும்.

புத்தகங்களை வாசிக்க தினமும் ஒருசில மணி நேரங்கள் ஒதுக்க வேண்டும். ஒவ்வொரு புத்தகத்திலும் பல நல்ல விஷயங்கள் உண்டு.அதனை நீங்கள் படித்து மனதில் நிறு த்தி வாழ்க்கையில் பி ன்பற்ற வேண்டும். சிகரம் அடையும்வரை நீங்கள் வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் எனில் நீங்கள் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தொடந்து கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மகளிர் திட்ட இயக்குநர் பாலகணேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கண்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News