உள்ளூர் செய்திகள்

ஊட்டி மலர் கண்காட்சியில் கல்வி அவசியம் குறித்து இசை நாடகம் அரங்கேற்றிய மாணவ, மாணவிகள்

Published On 2023-05-23 09:09 GMT   |   Update On 2023-05-23 09:09 GMT
  • ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி நடந்து வருகிறது.
  • சைபர் கிரமை் போலீசார் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் பாட்டு கச்சேரி, கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், சிரிப்பு பட்டிமன்றம் ஆகியவை நடத்தப்பட்டது.

இதன் ஒருபகுதியாக அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் இசை நாடகம் நேற்று நடந்தது. அப்போது மாணவ- மாணவிகள் பல்வேறு கருவிகளை ராகத்துடன் இசைத்தபடி, கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தினார்கள். இது சுற்றுலா பயணிகளிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

ஊட்டி மலர் கண்காட்சியில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு மத்தியில் சைபர் கிரமை் போலீசார் ஆன்லைன் மோசடி, ஆபத்தான கடன் செயலிகள், வேலை வாய்ப்பு என்ற பெயரில் வரும் ஆன்லைன் பணமோசடிகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

அப்போது செல்போன்களை கவனமாக கையாள வேண்டும் என்று பொதுமக்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News