உள்ளூர் செய்திகள்

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்லும் பெண்கள், மாணவிகள்.

புதியம்புத்தூர் பகுதியில் பஸ் படியில் நின்று பயணம் செய்யும் மாணவ-மாணவிகள் - கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

Published On 2022-08-12 08:48 GMT   |   Update On 2022-08-12 08:48 GMT
  • புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி கல்லூரிக்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர்.
  • மாணவ-மாணவிகள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.

புதியம்புத்தூர்:

புதியம்புத்தூரில் ஒரு மேல்நிலைப் பள்ளியும், இரண்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகளும், மூன்று தொடக்கப் பள்ளிகளும் உள்ளன. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து 500-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கல்வி பயில வருகின்றனர்.

அதுபோல் புதியம்புத்தூரில் இருந்து தூத்துக்குடி கல்லூரிக்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்று வருகின்றனர். காலை 8 மணியிலிருந்து 8.45 வரை நேர்வழியில் மூன்று பஸ்களும் சுற்றுப்பாதையில் ஒரு பஸ்சும் தற்சமயம் இயக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் மூன்று பஸ்களிலும் வாழவா மாணவிகள் மற்றும் தொழில் நிமித்தம் தூத்துக்குடி செல்வார்கள்.

அதிகமான பேர் பயணம் செய்வதால் பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. மாணவ-மாணவிகள் படிக்கட்டில் வெளியே தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். காலை 8. 15 மணிக்கு கூடுதலாக இரண்டு பஸ்கள் மாலை 4 மணிக்கு இரண்டு பஸ்சும் கூடுதலாக இயக்கினால்தான் மாணவ-மாணவிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியும். இந்த நேரங்களில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிப்பதாவது:-

கூடுதல் பஸ் இயக்க கோரி தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர், இணை மேலாளர், நிர்வாக இயக்குனர் ஆகியோரிடம் பலமுறை விண்ணப்பம் செய்தும் கோரிக்கை நிறைவேற்றப்ப டவில்லை. மாணவர்கள் நலன் கருதி உடனடியாக பஸ் இயக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி பஸ் மறியல் போராட்டம் நடத்த நேரிடும் என்றனர்.

Tags:    

Similar News