உள்ளூர் செய்திகள்

ஆய்வு கூட்டம் கலெக்டர் லலிதா தலைமையில் நடந்தது.

நெடுஞ்சாலைத்துறை பணி தொடர்பான ஆய்வு கூட்டம்

Published On 2022-10-16 10:10 GMT   |   Update On 2022-10-16 10:10 GMT
  • இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த இடம் கையகப்படுத்துவது.
  • சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை சம்பந்தமாக நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மாதிரி மங்கலம், முடிகண்டநல்லூர் இணைப்பு சாலை, சீர்காழி திருமுல்லைவாசல் சாலை பணி, கதிராமங்கலம் ஆகிய இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிக்கு அரசுக்கு சொந்தமாக உள்ள வருவாய்த் துறையைச் சார்ந்த இடம், இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த இடம், கையகப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட பணிகள் குறித்தும் முன்னேற்றம் குறித்தும் விரிவாக வருவாய் துறை ஊரக வளர்ச்சித் துறை நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் தங்களின் துறைகளில் சாலை பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறியப்பட்டது.

குறிப்பாக சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர்முருகண்ணன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர்அர்ச்சனா, மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சிதுறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News