உள்ளூர் செய்திகள்

நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு மானியம்

Published On 2022-12-09 09:17 GMT   |   Update On 2022-12-09 09:17 GMT
  • நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
  • 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம் தோட்டக்கலை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயி களுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 178 ஹெக்டேர் பரப்பளவுக்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி சிறு, குறு விவசாயிகள் 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக் கொள்ளலாம்.

விருப்பமுள்ள விவசாயிகள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், நிலவரைபடம், சிறு குறு விவசாயி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்க உள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், புதிதாக

பயன்பாட்டிற்கு கொண்டு

வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்

மோட்டார் பொருத்திக்

கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்க தொட்டி 116 கன அடி அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரமும் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சின்னதுரை தெரிவித்து உள்ளார். 

Tags:    

Similar News