வால்பாறையில் வயிற்றுப் போக்கால் வடமாநில தொழிலாளி திடீர் சாவு
- லாமியா சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
- சுகாதாரத்துறையினரும் எஸ்டேட் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு
கோவை,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் லாமியா (வயது 38). இவரது மனைவி அலிஷா காத்துன் (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 1 ஆண்டுக்கு முன்பு லாமியா குடும்ப த்துடன் கோவை மாவட்டம் வால்பாறைக்கு வந்தார். பின்னர் அணலி எஸ்டேட் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார்.
லாமியாவுக்கு கடந்த 2 நாட்களாக வயிற்று ப்போக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.
நேற்று அதிகாலை திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து லாமி யாவை எஸ்டேட் மேலாளர் அவரது வாகனத்தில் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லாமியா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவரது மனைவி அலிஷா காத்துன் தனது கணவரின் மரணம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி வால்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வால் பாறை போலீசார் வழக்குப் பதிவு செய்து லாமியாவின் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனை முடிந்ததும் லாமியாவின் இறப்புக்கான காரணம் குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சுகாதா ரத்துறையினரும் வடமாநில தொழிலாளி இறந்த எஸ்டேட் பகுதிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
தொழிலாளிக்கு வயிற்றுப் போக்கு எதனால் ஏற்பட்டது, உணவு பிரச்சினையா, குடிநீர் பாதிப்பா, அல்லது என்ன காரணத்தி னால் அவர் உயிரிழந்தார் என்பது பற்றி விசாரித்து வருகிறார்கள்.