கடலூர் மாவட்டத்தில் திடீர் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
- தற்போது சித்திரை மாதம் என்பதால் கடும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
- இன்று காலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரலுடன் தொடங்கி மழை பெய்து வந்தது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் சுட்டெரிக்கும் வெயில் தொடங்கி தற்போது சித்திரை மாதம் என்பதால் கடும் வெயிலால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கதாகும். இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலை ஓரங்களில் உள்ள தர்பூசணி கிருனிப்பழம் நுங்கு பழ வகைகள் பழச்சா றுகள் குளிர்பானங்கள் கரும்பு சாறுகள் போன்றவற்றை வாங்கி குடித்து வெயிலின் தாக்கத்தை குறைத்து வந்ததை காண முடிந்தது. மேலும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக இரவு நேரங்களில் அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் தூக்கம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருவதையும் காணமுடிந்தது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடும் வெயிலை தணிக்கும் விதமாக மழை பெய்யாதா? என பொதுமக்கள் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஏங்கி க் கொண்டிருந்தனர்,
இந்த நிலையில் கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். அதன்படி, இன்று காலை கடலூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது வழக்கமான வெயிலின் தாக்கம் அதிகளவில் இல்லாமல் குளிர்ந்த காற்றும் வீசி வந்தன இந்த நிலையில் காலை கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான சாரலுடன் தொடங்கி மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் குடைபிடி த்தபடி சென்றதையும் காண முடிந்தது மேலும் ஒரு சில மக்கள் மழையை அனுபவிக்கும் விதமாக நனைந்தபடி சென்றதையும் காணமுடிந்தது மேலும் திடீர் மழை காரணமாக பொதுமக்கள் ஆனந்தத்தில் மிதந்ததையும் அவர்களது மகிழ்ச்சியில் காண முடிந்தது மேலும் சாலை வியாபாரிகள் திடீர் மழை காரணமாக சற்று பாதிப்படைந்தனர். ஆனால் கோடை வெயில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் திடீர் மழை பெய்த காரண த்தினால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்ததை காண முடிந்தது.