உள்ளூர் செய்திகள்

நாகையில் திடீர் பனிபொழிவு பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

நாகையில் திடீர் பனிபொழிவு: பொதுமக்கள், மாணவர்கள் அவதி

Published On 2023-10-19 09:32 GMT   |   Update On 2023-10-19 09:32 GMT
  • வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.

நாகப்பட்டினம்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 23ஆம் தேதி துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள் ஆனால், தற்போது அதற்கு மாறாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாகவே லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.

குறிப்பாக இன்று அதிகாலை முதல் கீழ்வேளூர், பட்டமங்கலம்,தேவூர், கிள்ளுக்குடி, அனக்குடி, இறையான்குடி, கொளப்பாடு, திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சற்று கூடுதல் பனிப்பொழிவுடன் கூடிய மந்தமான வானிலை நிலவி வருகிறது.

பருவ நிலை மாற்றம் காரணமாக மார்கழி மாதம் போன்று காணப்படும் சூழலால் பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

அதிகாலை வேளையில் பணிக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் டியூசன் செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் அவதிக்குள்ளாகி உள்ளதோடு சளி இருமல் காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படும் எனவும் அச்சமடைந்துள்ளனர்.

நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்கள் முழுவதுமாக பனி போர்வை போர்த்தியது போன்று காட்சியளித்து வருகிறது.

Tags:    

Similar News