பரமத்திவேலூர் பகுதியில் திடீர் வாகன சோதனை
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- மேலும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உட்பட 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் மற்றும் சேளூர் பகுதியில் தனியார் வாகனங்கள் வாடகை ஒப்பந்த வாகனமாக இயக்கப்பட்டு வருவதை தடுக்கும் நடவடிக்கையாக, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி, நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சரவணன், உமா மகேஸ்வரி ஆகியோர் நடத்திய சோதனையில் பரமத்திவேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் 3 கார்கள், வாடகைக்கு இயக்கப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் உட்பட 4 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு பரமத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலும் அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் வந்த 2 இருசக்கர வாகன ஓட்டிகள், செல்போன் பேசிக்கொண்டும், சீட் பெல்ட் அணியாமலும் வந்த கார் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வாகன சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.