உள்ளூர் செய்திகள்
- அரசுகள் அறிவித்த முழுத்தொகையை வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
- மொட்டை அடித்து, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் 18-வது நாளாக, தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மொட்டை அடிக்கும் போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தங்க.காசிநாதன் தலைமையில் கரும்பு விவசாயிகள், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்க்க வேண்டும்.
மத்திய மாநில அரசுகள் அறிவித்த முழுத்தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நாங்ககுடி கிராமத்தை சேர்ந்தவர்களான ராஜேந்திரன், தமிழரசன், ராஜவேலு, சம்பத், செல்வகுமார் ஆகிய 5 பேரும் மொட்டை அடித்து, கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.