தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.
- மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பேரணியாக சுற்றி வந்து நிறைவடைந்தது.
தஞ்சாவூர்,
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மனநல மருத்துவத்துறை சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தப் பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் மருத்துவக் கல்லூரி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தற்கொலை எண்ணம் வராமல் தடுப்பது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக புறப்பட்டனர்.
மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பேரணியாக சுற்றி வந்து நிறைவடைந்தது.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருது துரை, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம், நிலையை அலுவலர் செல்வம், கண்காணிப்பாளர் மத்தியாஸ், சென்னை மனநலத்துறை பேராசிரியர் டாக்டர் அசோகன், மனநலத்துறை தலைவர் மீனாட்சி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.