திருச்செங்கோடு குஞ்சு மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை
- திருச்செங்கோடு காந்தி நகரில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது.
- ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு காந்தி நகரில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப்பழமையான குஞ்சு மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று சுமங்கலி பூஜை நடத்தப்படுகிறது.
அதன்படி அர்த்தநா–ரீஸ்வரர் கோவில் சிவாச்சா–ரியார்கள் தலைமையில் கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது.
குஞ்சு மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், தேன் போன்ற மங்கல திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு பெண்கள் மஞ்சள் சாற்றி வழிபட்டனர். 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த சுமங்கலிப் பெண்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு பாத பூஜை நடந்தது. பினனர் அவர்களிடம் திருமணமாகாத கன்னிப் பெண்கள் ஆசீர்வாதம் பெற்றனர்.
துர்க்கை வழிபாட்டு குழு அமைப்பாளர் யசோதா கோபாலன் அனைவரையும் வரவேற்றார். விஜயகுமாரி, மலர்ச்செல்வி, சாந்தி, மல்லிகேஸ்வரி ஆகியோர் அனைவருக்கும் துணிகள் வழங்கினர். தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தினார்.
விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். புஷ்பாஞ்சலி கமிட்டி பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலை–மையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.