உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

சிறுவர்களுக்கு கோடைக்கால கலைபயிற்சி முகாம் நாளை தொடங்குகிறது- கலெக்டர் தகவல்

Published On 2023-05-09 09:30 GMT   |   Update On 2023-05-09 09:30 GMT
  • நாளை முதல் வரும் 19-ந் தேதி வரை தொடர்ந்து இப்பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
  • முகாமில் கலந்து கொள்ளும் சிறுவர்களுக்கு நிறைவு நாளில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனி காலை 9 மணி முதல் 12 மணிவரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தேசிலம்பம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளி (அரண்மனை வளாகம்)யில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சவகர் சிறுவர் மன்ற த்தில் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறார்களுக்கு பள்ளிக்கல்வியோடு துணைக்கல்வியாக கலைப் பயிற்சி வழங்கி அவர்களை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் அமைவதற்கு, கலை பண்பாட்டுத் துறை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு நாளை (புதன்கிழமை) முதல் வரும் 19-ந் தேதி வரை தொடர்ந்து இப்பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.

கலைப் பயிற்சி முகாம் தினசரி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணிவரை நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலைப் பயிற்சி முகாமில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே சிலம்பம் ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் சிறார்களுக்கு நிறைவுநாளில் பங்கேற்ற மைக்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

இக்கலைப் பயிற்சி முகாமில் கலந்து கொள்கின்றவர்கள் தங்களது வயதுச் சான்றிதழுடன் தஞ்சாவூர் (அரண்மனை வளாகத்தில் இயங்கிவரும்)அரசர் மேல்நிலைப் பள்ளிக்கு நாளை காலை 9 மணிக்கு வருகை தருமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News