அரசு பள்ளிக்கு கல்வி சீர்வரிசை பொருட்கள் வழங்கல்
- ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன.
- வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு பொருட்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 1970ம் ஆண்டு காலகட்டத்தில் ராஜ இல்லற ஜோதி என்பவர் 8-ம் வகுப்பு வரை பயின்றுள்ளார்.
இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார் .
இந்நிலையில் அவரது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மகன் பிரபு ராஜ்குமார் தன் தாய் பயின்ற திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் விளத்தூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான மின்விசிறிகள், மின்விளக்குகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் தரைவிரிப்புகள், தண்ணீர் குடம், எழுது பொருட்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பள்ளி மாணவர்களுக்கும் பள்ளிக்கும் தேவையான பல்வேறு பொருட்களை தமது ஜோதி அறக்கட்டளை சார்பில் கல்வி சீர்வரிசையாக வழங்க முடிவு செய்தார்.
அதன்படி ஜோதி அறக்கட்டளை செயலாளர் பிரபு ராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்ட அறக்கட்டளை பணியா ளர்கள், விளத்தூர் மற்றும் பயரி பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் சீர்வரிசை தட்டுகளுடன் பள்ளிக்கு தேவையான பொரு ட்களையும் எடுத்து கொண்டு ஊர்வலமாக வந்து வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தியிடம் கல்வி சீர் வரிசையை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு பரிசு பொருட்களும் சான்றி தழ்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் தையல் நாயகி, உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பி னர்கள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.