உள்ளூர் செய்திகள்

சாலையோர வியாபாரிகளுக்கு சோலார் மின்சாதனம் வழங்கப்பட்டது.

சாலையோர வியாபாரிகளுக்கு சோலார் மின்சாதனம் வழங்கல்

Published On 2023-07-29 09:46 GMT   |   Update On 2023-07-29 09:46 GMT
  • சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
  • அனைத்து மின் சாதனங்களையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் நாம்கோ தொண்டு நிறுவனம், இந்திய அரசு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மற்றும் புதுடெல்லி ஜி.ஐ.இசர்ட் நிறுவனம் ஆகியவை இணைந்து திருத்துறை ப்பூண்டியில் சாலை ஓரங்களில் மின் இணைப்பு இன்றி தொழில் செய்யும் ஏழை வியாபாரிகளுக்கு சோலார் மின் சாதனம் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் பிரதான் பாபு தலைமை தாங்கினார். மேலாளர் சீதாலெட்சுமி, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாம்கோ இயக்குனர் ஜீவானந்தம் சூரியசக்தி மின்சாதனங்கள் பயன்பாடு குறித்து எடுத்து ரைத்தார்.

நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்து கொண்டு சாலையோர ஏழை வியாபாரி களுக்கு சோலார் மின் சாதனம் வழங்கி பேசுகையில்:-

நாம் பயன்படுத்தும் அனைத்து மின் சாதனங்க ளையும் சோலார் சக்தியில் பயன்படுத்த முன்வர வேண்டும். நாம்கோ தொண்டு நிறுவனம் சோலார் விழிப்புணர்வு பணியை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.

இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் மற்றும் பயனாளிகள், கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நாம்கோ பணியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News