உள்ளூர் செய்திகள்

செய்துங்கநல்லூரில் விவசாயம் செழிக்க வேண்டி நெல்களத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி

Published On 2023-11-19 08:44 GMT   |   Update On 2023-11-19 08:44 GMT
  • வியாக்ரபாதீஸ்வரர் கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
  • நெல்களத்தில் விவசாயம் செழிக்க வேண்டி விநாயகர் முகத்தில் வந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார்.

செய்துங்கநல்லூர்:

செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஆலயமான சிவகாமி அம்பாள் சமேத பதஞ்சலி வியாக்ரபாதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயம் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு வரை திருப்பணி இன்றி கிடந்தது. உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் வி.கோவில் பத்து, செய்துங்கநல்லூர் ஆன்மிக பேரவை சார்பில் இந்த கோவிலில் திருப்பணி நடந்தது. கொடி மரம் வைக்கப்பட்டது. பள்ளிஅறை கட்டப்பட்டது.

63 நாயன்மார்கள் சிலைகள் மீண்டும் சீரமைக்கப்பட்டது. 100 வருடங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட அனைத்து திருவிழாக்களும் மீண்டும் நடத்தப்பட்டது. தற்போது திருப்பணி செய்து கும்பாபி சேகம் நடந்தது, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து ள்ளது. இந்த கோவிலை தென் தில்லை எனும் தென் சிதம்பரம் என்றும் அழைப்பர். இந்த கோவிலில் கார்த்திகை திருவிழா மற்றும் சஷ்டி திருவிழா நடந்து வருகிறது. நீண்ட நாள்களுக்கு பிறகு இந்த வருடம் சூரசம்காரம் நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக கடந்த 6 நாள்கள் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் நடந்து வந்தது. அதன் பின்னர் சூரசம்காரத்தை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் பூஜைகள் நடந்தது. அதன்பின்னர் மாலையில் முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.

கோவில் வளாகத்தில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அதை தொடர்ந்து அருகே உள்ள நெல்களத்தில் விவசாயம் செழிக்க வேண்டி விநாயகர் முகத்தில் வந்த சூரனை முருகப்பெருமான் வதம் செய்தார். அதன் பின்னர் விநாயகர் கோவில் முன்பு வந்து சூரபத்மனை வதம் செய்தார். பின்னர் கோவிலுக்கு சென்றார். அங்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. அதன் பின் அலங்கார பூஜை நடந்தது. பின்னத் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பூஜை ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் முத்துராமன், பாலா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் தலைமையில் ஆன்மிக பேரரவையினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News