உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து ஓட்டல்களிலும் ஆய்வு

Published On 2023-07-01 09:22 GMT   |   Update On 2023-07-01 09:22 GMT
  • குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளை காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.
  • தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

தருமபுரி,

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு த்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தா லோசிக்கப்பட்டது.

ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்களை அதிகளவு சேகரித்து பயோடீசலாக மாற்ற அறிவுறுத்தப்பட்டது.

தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் உபயோகம் மற்றும் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

குட்கா மற்றும் பான்மசாலா விற்பனை செய்யும் கடைகளை காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து உடனடி அபராதம் விதிக்குமாறு அறிவுறுத்தினார்கள். Eat Right Challenge (ERC) Activity குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் அயோடின் விழிப்புணர்வு உடன், உணவு பொருட்கள், திண்பண்டங்கள் லேபிள்களில் (தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி) குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சாந்தி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தருமபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் கடைகளில் அயோடின் கலந்த உப்புகளை விற்பனை செய்வது குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நகர வர்த்தகர் சங்கம், நுகர்வோர் சங்கம், காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News