உள்ளூர் செய்திகள்

திருக்கருகாவூர் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது.

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்

Published On 2023-05-31 10:05 GMT   |   Update On 2023-05-31 10:05 GMT
  • 10 நாட்கள் நடைபெறும் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர்.

மெலட்டூர்:

தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் ஸ்ரீ முல்லை வனநாதர் உடனுறை ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயில் வைகாசி விசாக பெருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது 10 நாட்கள் நடைபெறும் வைகாசி உற்சவ விழாவில் தினசரி சுவாமி அம்பாள் காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

7-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று சுவாமி முல்லைவன நாதருக்கும் அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடை பெற்றது.

திருக்கல்யாண வைவத்தை முன்னிட்டு சுவாமி அம்பாளுக்கு பட்டு வஸ்தி ரங்கள் அணி விக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள்.

அக்னிஹோ மங்கள் வார்க்கப்பட்டு ஆகமவிதி கள்படி சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கோயில் செயல்அ லுவலர் ஆசைத்தம்பி மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News