உள்ளூர் செய்திகள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி சண்முகர் 368-வது ஆண்டு விழா சிறப்பு வழிபாடு

Published On 2023-02-03 09:21 GMT   |   Update On 2023-02-03 09:21 GMT
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368- வது ஆண்டு விழா நடைபெற்றது.
  • தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்ட 368- வது ஆண்டு விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபா ராதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு சுவாமி அலைவாயு உகந்த பெரு மான் சப்பர த்தில் வீதி உலா நடக்கிறது.

தைப்பூசம்

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வருபம், 2மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் பகல் 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

தங்க மயில் வாகனத்தில் வீதி உலா

மதியம் உச்சிகால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயு உகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம் , அலங்காரம் நடைபெறுகிறது.

தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

Tags:    

Similar News