உள்ளூர் செய்திகள்

மேயர் சண்.ராமநாதன் பேட்டியளித்தார்.

பொதுமக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை- மேயர் உறுதி

Published On 2022-11-02 10:22 GMT   |   Update On 2022-11-02 10:22 GMT
  • உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.
  • 51 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம்.

தஞ்சாவூர்:

தமிழகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று முதன் முறையாக நகரம், மாநகரம், பேரூராட்சிகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகளிலும் அந்தந்த கவுன்சிலர்கள் தலைமையில் பகுதி சபா கூட்டம் நடந்தது.

இந்த நிலையில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.

பகுதி சபா கூட்டம் குறித்து மேயர் சண்.ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு மாநகரங்களிலும் பகுதி சபா கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி குறுகிய காலத்தில் தஞ்சை மாநகராட்சியில் பகுதி சபா கூட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

இதற்கு மாநகராட்சி அலுவலர்கள் துரிதமாக பணி மேற்கொண்டு கூட்டம் சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுத்தனர். பகுதி சபா கூட்டத்தில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகள் குறித்து அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முன் வைத்துள்ளனர். அந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது ஆணையர் சரவணகுமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News