உள்ளூர் செய்திகள்

ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திதுறை செயலாளர் செல்வராஜ் ஆய்வு செய்த காட்சி. அருகில் கலெக்டர் கார்த்திகேயன் உள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ் வளர்ச்சி செயலாளர் ஆய்வு

Published On 2023-05-05 09:20 GMT   |   Update On 2023-05-05 09:21 GMT
  • முத்தூர் ஊராட்சியில்கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.
  • ரெட்டியார்பட்டி குளத்தினை தூய்மைப் படுத்துமாறு அறிவுறுத்தினார்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் இன்று மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலையில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

ஆலோசனை

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அனைத்து திட்டப்பணி களும் காலதாமதமின்றி நிர்ணயிக்கப்பட்ட காலத்தி ற்குள் தரமான முறையில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக இன்று பாளை யூனியன் முத்தூர் ஊராட்சியில் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடப் பணிகளையும், ரூ. 10 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடத்தையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

தொடக்கப்பள்ளி கட்டுமானப்பணி

பின்னர் முத்தூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். தொடர்ந்து கொடியன்குளத்தில் பேராசிரியர் அன்பழகன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு இப்பணிகளை விரைந்து முடித்து, வரும் கல்வி ஆண்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து ரெட்டியார்பட்டி மேம்ப டுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு தேவையான வசதிகள் குறித்து பார்வையிட்டார். மருந்துகள் சேமிப்பு அறை, அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிக்கும் அறை, எக்ஸ்ரே எடுக்கும் அறை போன்ற அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் ரெட்டியார்பட்டி குளத்தினையும் பார்வையிட்டு குளத்தில் உள்ள முட்செடிகளை அகற்றி குளத்தினை தூய்மைப் படுத்துமாறு அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News