உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜனவரியில் தொடக்கம்

Published On 2022-12-03 10:23 GMT   |   Update On 2022-12-03 10:23 GMT
  • கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க–ழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.
  • கலந்தாய்வுக்கு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 755 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

கோவை

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கப்படும் என பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்க–ழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

இதில், அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடுக்கான சான்றிதழை பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி நேற்று வழங்கினார்.

பின்னர், அவர் நிருபர்க–ளிடம் கூறியதாவது:-

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை க்கழகத்தில் இளமறிவியல் பட்டப்படிப்பிற்கு கடந்த 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7,5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 413 இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வுக்கு அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 7 ஆயிரத்து 755 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள் 6,602, காத்திருப்பு பட்டியலில் 147 பேர் உள்ளனர். இந்த கலந்த ாய்விற்கு பொதுப் பாடப் பிரிவில் மொத் தம் 1,130 பேர் அழைக்க ப்பட்டனர். தொழிற் கல்வி பாடப்பிரி வில் 54 பேர் அழைக் கப்ப ட்டனர். கலந் தாய்வில் பங் கேற்ற மாணவர் களுக்கு இட ஒதுக்கீட் டிற்கான சான் றிதழ் வழங்கப ்பட்டது. இவர்க ளுக்கான நகர்வு முறை இன்று நடக் கிறது. மேலும், பொதுப்பிரிவு மாணவர் களுக்கான முதற் கட்ட கலந் தாய்வு டிசம் பர் 5-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை நடக் கிறது. பின்னர், 10-ந் தேதி இட ஒதுக்கீடும். 12-ந் தேதி முதல் 15-ம் தேதி வரை சான்றிதழ் சரி பார்ப்பும் நடக்கிறது.

ேலும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜனவரி முதல் வாரத்தில் துவங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News