விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க தமிழக அரசு முன்வரவில்லை- முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு
- தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
- கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமை தாங்கி பேசுகையில்:-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
கள்ளச்சாராய விற்பனையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் தமிழக அரசு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுக்க முன்வரவில்லை என்றார்.
தொடர்ந்து, வேதாரண்யம் பகுதியில் கடந்த அ.தி.மு.க அரசின் போது மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகளை குறித்து பட்டியலை படித்து காண்பித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சுப்பையன், திலீபன், ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், நகர செயலாளர் நமச்சிவாயம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.