சீர்காழியில், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
- அந்தியோதயா ரெயில் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அனைத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.
சீர்காழி:
தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் அதன் தலைவர் ஜெக.சண்முகம் தலைமையில் சீர்காழியில் நடந்தது.
மாவட்ட தலைவர் சுந்தரராசன், சிறப்பு தலைவர் ஜெயசந்திரன், வட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை விகித்தனர்.
வட்ட பொருளர் தவகுமார் வரவேற்றார் .
வாழ்வியலை நோக்கி என்ற தலைப்பில் தியாகராஜன், திருக்குறளும் மனித வாழ்வும் என்ற தலைப்பில் சக்ரபாணியும், சிந்திக்க சில நிமிடங்கள் என்ற தலைப்பில் வீரபாண்டியும், குண்டலகேசி என்ற தலைப்பில் சாமிதுரையும் சொற்பொழிவாற்றினர்.
வைத்தினாசாமி, சக்கரவர்த்தி, மணிவாசகம், சிவபெருமான், ராஜா,ராதாகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் உரிய காலத்தில் டி.ஏ நிலுவையுடன் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது,
மழைகாலம் தொடங்கியுள்ள நிலையில் நகரில் அனைத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைத்திட நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது, அந்தியோதயா ரயில் சீர்காழியில் நின்று செல்ல மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் செயலர் சாம்சன் கில்பர்ட் நன்றி கூறினார்.