உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டியில் வென்ற மாணவனுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

மலேசியாவில் நடந்த கராத்தே போட்டியில் தமிழக மாணவன் தங்கம் வென்று சாதனை

Published On 2023-05-30 10:08 GMT   |   Update On 2023-05-30 10:08 GMT
  • சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 1,300 பேர் கலந்து கொண்டனர்.
  • தனித்திறன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்னார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா, தேத்தாக்குடி தெற்க்கை சேர்ந்த அழகேசன்- மலர்விழி தம்பதியரின் மகன் அகிலரசு. (வயது 12). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த வாரம் மலேசியா நாட்டின் ஈபோவில் நடைபெற்ற 19-வது அனைத்து உலக கராத்தே போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் அகிலரசு கலந்து கொண்டு தங்கப்பதக்கமும், தனித்திறன் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.

போட்டியில் இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,300 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், தங்கம் வென்ற தமிழக மாணவர் அகிலரசுக்கு மலேசிய நாட்டு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சிவகுமார் வரதராஜுலு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், தங்கம் வென்று தமிழகம் வந்த மாணவன் அகிலரசுவை ஊராட்சி தலைவர் வனஜா சண்முகம், ஊராட்சி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News