உள்ளூர் செய்திகள் (District)

தமிழ்புத்தாண்டு கொண்டாட்டம்- கோவையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-04-14 09:49 GMT   |   Update On 2023-04-14 09:49 GMT
  • நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
  • 2 டன் பழங்களை கொண்டு, விநாயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவை

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத பிறப்பான ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தமிழகம் முழுவதும் தமிழ்புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி கோ வை மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்க ளிலும் இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டை யொட்டி கோவை புலிய குளம் முந்தி விநாயகர் கோவில் நடை அதிகாலையி லேயே திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகருக்கு சிறப்பு அபிஷே கங்களும், தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் ஆப்பிள், ஆரஞ்சு உள்பட 2 டன் பழங்களை கொண்டு, விநாயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

புத்தாண்டையொட்டி காலையிலேயே முந்தி விநாயகர் கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்த னர். அவர்கள் நீண்ட வரி சையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

மருதமலை முருகன் கோவில் நடை அதிகாலை 5.30 மணிக்கு திறக் கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷே கங்கள் மற்றும் ஆராதா னைகள் நடை பெற்றது.

புத்தாண்டு என்பதால், மருதமலை முருகன் கோவிலுக்கு கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை, ெபாள்ளாச்சி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அவர்கள் மலைக்கோவிலுக்கு படிக்கட்டுகள் வழியாகவும், மலைப்பாதை வழியாகவும் கோவிலுக்கு சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மலையடிவாரத்திலும் எங்கு பார்த்தாலும் பக் தர்கள் கூட்டமாகவே கா ணப்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மேலும் அங்கு போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

காட்டூர் அம்பிகை முத்துமாரியம்மன் கோவிலில் புத்தாண்டையொட்டி, அம்மனுக்கு ரூ.6 கோடி மதிப்பில் பணம் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் தியாகி குமரன் மார்க்கெட் பிளேக் மாரியம்மன் கோவிலிலும் அம்மன் தங்க அங்கி அலங்காரத்திலும், பெரிய கடைவீதி மாகாளியம்மன் மலர் அலங்காரத்திலும், பொன்னையராஜபுரம் விக்னராஜ கணபதி மலர் அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதேபோல் கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ர காளியம்மன் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ள மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

Similar News