உள்ளூர் செய்திகள்
பிராட்வேயில் பிளாஸ்டிக் பொருட்கள் கடையில் தீ விபத்து
- கடைகளுக்கு தீ பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- தீவிபத்துக்கான காரணம் குறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரம்பூர்:
பிராட்வே, பூக்கடை பகுதி வெங்கடாசல தெருவில் பூந்தமல்லியை சேர்ந்த இம்ரான் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமை கடையை பூட்டி தன்னுடைய உறவினர் திருமணத்திற்காக பழனி சென்றார். இந்த நிலையில் இன்று அதிகாலை இம்ரானின் பிளாஸ்டிக் கடையில் திடீரென தீப்பற்றியது. தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை, ஐகோர்ட்டு ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.