சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவ பக்தரை தாக்கிய தீட்சிதர்கள்
- சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவ பக்தரை தீட்சிதர்கள் தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
- கார்வர்ணனை தள்ளி நிற்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரியை சேர்ந்தவர் கார் வண்ணன் (வயது 61). சிவ பக்தர்.
இவர் தினமும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். அது போல் நேற்று சாமி தரிசனம் செய்ய நடராஜர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது அவர் சுவாமி முன் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை நடராஜர் கோவிலில் தீட்சிதர்களாக உள்ள கனக சபாபதி, அவரது மகன் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் கண்டித்துள்ளனர்.
கார்வர்ணனை தள்ளி நிற்குமாறு கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கனகசபாபதி அவரது மகள் ஸ்ரீவர்ஷன் ஆகியோர் சிவபக்தர் கார்வண்ணன் கன்னத்தில் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த கார்வண்ணன் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து அவர் சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து தீட்சிதர்கள் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.