உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்பு வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்ட காட்சி.

வாணியம்பாடியில் ஏரி கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 50 வீடுகள் இடிப்பு

Published On 2022-12-19 05:16 GMT   |   Update On 2022-12-19 05:16 GMT
  • வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
  • அங்கு தங்கி இருந்த 20 குடும்பத்தினர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வாணியம்பாடி:

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

வாணியம்பாடி கோவிந்தாபுரம் ஏரியிலிருந்து பாலாறு வரை செல்லும் 3,800 மீட்டர் நீள ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. வீடுகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு அங்குள்ள குடும்பத்தினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகளை காலி செய்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த 50 வீடுகளை இடிக்கும் பணி தொடங்கியது.

வாணியம்பாடி தாசில்தார் சம்பத் மற்றும் டி.எஸ்.பி. சுரேஷ்பாண்டியன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு தங்கி இருந்த 20 குடும்பத்தினர் தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்கள் உடனடியாக தங்குவதற்கு முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர். சில நாட்களில் 20 குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாசில்தார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News