சிறுமிக்கு ஆபாச படம் அனுப்பிய போலி சாமியார்- போலீசார் மடக்கி பிடித்து விசாரணை
- புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போலி சாமியார் சின்னதுரையை கைது செய்தனர்.
- சின்னத்துரை இவ்வாறு வேறு எங்காவது பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா? ஆபாச படங்களை அனுப்பி ஏதேனும் முறைகேடுகள் செய்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
அரூர்:
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40).
தருமபுரி மாவட்டம், அரூர் வள்ளுவபுரத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு கடந்த 19-ம் தேதி தன்னை சாமியார் என அறிமுகப்படுத்திக் கொண்டு சின்னத்துரை சென்றுள்ளார்.
அந்த வீட்டின் பின்புறம் செய்வினை உள்ளதாகவும், அதை நீக்க பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் வீட்டுக்காரருக்கு அந்த ஆசாமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பூஜை பொருட்கள் வாங்க போகலாம் என்று சின்னதுரையை அழைத்துக் கொண்டு அரூர் வந்துள்ளார்.
தன் மீது சந்தேகம் வந்துவிட்டது என்பதை அறிந்த சின்னத்துரை போலீசில் பிடித்து கொடுத்து விடுவார் என்ற பயத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.
தப்பி ஓடிய சின்ன துரையை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த வீட்டுக்காரர் பூஜை செய்யாமல் சென்று விட்டீர்களே என கேட்டபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் அவரது மகளுடைய செல்போனுக்கு ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை சின்னதுரை அனுப்பியுள்ளார். இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போலி சாமியார் சின்னதுரையை கைது செய்தனர். சின்னத்துரை இவ்வாறு வேறு எங்காவது பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா? ஆபாச படங்களை அனுப்பி ஏதேனும் முறைகேடுகள் செய்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.