உள்ளூர் செய்திகள்

நேருயுவகேந்திரா அமைப்பின் கலாச்சார விழாவில் பங்கேற்ற கன்னியாகுமரி எம்.பி விஜய்வசந்த்

Published On 2023-03-19 12:53 GMT   |   Update On 2023-03-19 12:53 GMT
  • நேருயுவகேந்திரா அமைப்பின் பாண்டிச்சேரி மற்றும் தமிழக நிர்வாகி செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
  • நிகழ்ச்சியில் இயற்கை காய்கறிகள் மற்றும் தானிய வகைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் அழிக்கால் பகுதியில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வளாகத்தில் நேருயுவகேந்தரா அமைப்பின் சார்பில் கலாச்சார விழா நடைபெற்றது.

இந்த விழாவை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மேலும் அங்கு நடைபெற்ற கண்காட்சி மற்றும் இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவித்தார்.

நேருயுவகேந்திரா அமைப்பின் பாண்டிச்சேரி மற்றும் தமிழக நிர்வாகி செந்தில்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இயற்கை காய்கறிகள் மற்றும் தானிய வகைகளின் கண்காட்சியும் நடைபெற்றது.

பின்னர், விழாவில் பேசிய கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், " நேருயுவகேந்திரா அமைப்பு இது போன்று மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக மாணவ மாணவிகள் கல்வியில் மட்டும் ஆர்வம் செலுத்தாமல் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க வேண்டும். இதில் அவர்கள் வெற்றி தோல்வியை பற்றி கவலைப்பட கூடாது. வருங்காலங்களில் கல்வி அல்லாத பிற தகுதிகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் இதனை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்.

Tags:    

Similar News