உள்ளூர் செய்திகள்

தர்பூசணி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது- 5 பேர் படுகாயத்துடன் தப்பினர்

Published On 2023-11-19 04:58 GMT   |   Update On 2023-11-19 04:58 GMT
  • இரவு நேரத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலை அமைந்துள்ளது.

இந்த சாலை வழியாக கர்நாடகாவிற்கு செல்வதற்கு குறைந்த தூரம் என்பதாலும் வளைவுகள் குறைவு என்பதாலும் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி வருகின்றார்கள்.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ராமாபுரம் பகுதியில் இருந்து தர்பூசணிகள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கேரளா மாநிலத்துக்கு செல்வதற்காக அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக வந்து கொண்டிருந்தது. இந்த லாரியில் 6 பேர் இருந்தனர்.

இதை தொடர்ந்து அந்த லாரி நேற்று இரவு வரட்டுப்பள்ளம் அணை வளைவு பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லாரி திடீரென தலை குப்புற கவிந்தது. இதில் லாரியில் வந்தவர்கள் கதறி துடித்தனர். மேலும் லாரியில் இருந்த தர்ப்பூசணி பழங்களும் ரோட்டில் சிதறி கிடந்தன்.

இதில் லாரியில் வந்த சென்னம்பட்டி சனிசந்தை சித்தகவண்டனூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் (47), பழனியம்மாள் (44), ராமாயி (45), செவன் (48), மாரி முத்து (49) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவ மனை மற்றும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கேரளா மாநிலம் திருச்சிசூர் கொடுங்கல்லூர் பகுதியை சேர்ந்த டிரைவர் ரியாஸ் (34) என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இதனால் அந்த பகுதியில் இரவு நேரத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News