உள்ளூர் செய்திகள்

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆய்வு செய்த காட்சி.

திருப்பூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் அமைச்சர் சி.வி.கணேசன் 'திடீர்' ஆய்வு

Published On 2022-12-24 06:53 GMT   |   Update On 2022-12-24 06:53 GMT
  • தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் உத்தரவிட்டார்.
  • கோப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் சி.வி.கணேசன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

திருப்பூர்:

தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாலையில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார்.

முன்னதாக அமைச்சர் சி.வி.கணேசன் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தொழிலாளர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், மருந்து மாத்திரைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளதா? மற்றும் தொழிலாளர்களுக்கான குடிநீர் வசதி, கழிவறை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார் .

மேலும் தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகளை அதிக அளவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கோப்புகளை ஆய்வு செய்த அவர் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து பூலுவப்பட்டியில் விரிவாக்கப்பட்ட இ.எஸ்.ஐ., மருத்துவமனை கட்டுமான பணிகளையும், தொழிற்கல்வி நிறுவனத்தையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

Tags:    

Similar News