உள்ளூர் செய்திகள்

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

Published On 2024-01-22 06:11 GMT   |   Update On 2024-01-22 06:11 GMT
  • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.
  • மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட ஆவுடையார்புரம் பகுதியில் 100 குடும்பங்கள் 4 தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் பல கோடி மதிப்புள்ள நிலத்தை சிலர் அபகரிப்பு முயற்சி செய்து வருவதாக அப்பகுதி பொது மக்கள் புகார் கூறி வருகின்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆவுடையார்புரம் பகுதியில் மது போதையில் வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தை நேற்று இரவு முற்றுகையிட்டனர்.

அப்போது தூத்துக்குடி மாநகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை செயலாளர் வக்கீல் செல்வகுமார் கூறுகையில், இப்பகுதியில் 3 நபர்கள் மது அருந்தி கொண்டு இருந்தனர்.

அதை பொதுமக்கள் தட்டிக்கேட்டனர். அதற்கு அவர்களின் வீட்டை அந்த 3 பேரும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து இன்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளோம் என்றார்.

இதுகுறித்து மத்திய பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபா ஜென்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News