நகை பறிப்பு முயற்சியில் கழுத்து அறுப்பு: சேலம் மாநகராட்சி அதிகாரியின் தாய்க்கு தீவிர சிகிச்சை
- மூதாட்டி மெகருன்னிசா கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த பெண்ணை பிடித்து தர்ம அடி கெடுத்தனர்.
- கழுத்து அறுக்கப்பட்ட தால் காயம் அடைந்த மெகருன்னிசாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி சவுந்தர் நகரை சேர்ந்தவர் நசீர் (வயது 45), மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக உள்ளார்.
இவரது தாய் மெகருன்னிசா (73). இவர் மேல் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், மெகருனிஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டார்.
தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது, அவரை பின் தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற அந்தப் பெண், கத்தியால் மெகருன்னிசாவின் கழுத்தை அறுத்தார். பின்னர் அவர் அணிந்திருந்த தோடு சங்கிலியை பறித்தார்.
இதையடுத்து, மூதாட்டி மெகருன்னிசா கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அந்த பெண்ணை பிடித்து தர்ம அடி கெடுத்தனர்.
பின்னர் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்து அந்த பெண்ணை ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர் லைன்மேடு தர்மலிங்கம் முதல் கிராஸ் பகுதியை சேர்ந்த பாஷா என்பவரது மனைவி ஜன்மா (32) என்பதும், ஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு கத்தியால் குத்தியதும் தெரிய வந்தது.
தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கழுத்து அறுக்கப்பட்ட தால் காயம் அடைந்த மெகருன்னிசாவுக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.