உள்ளூர் செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகள் தூர்வாரி புனரமைப்பு- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2023-05-07 06:45 GMT   |   Update On 2023-05-07 06:46 GMT
  • திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • ஏரிகளை தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வரும் நிலையில் ஏரி, குளங்களில் நீர் இருப்பு குறைந்து வருகிறது.

இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் ஏரி, நுங்கம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளை தூர்வாரி, புனரமைப்பு செய்யும் பணியை தொடங்க தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்து உள்ளது.

ஏரிகளை தூர்வாரும் பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மேல்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம் ஏரிகளை தூர்வாரி புனரமைப்பதன் மூலம் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News