திருவள்ளூரில் மூன்று நாள் நடைபெறும் சேவல் சண்டை
- திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தங்கனூர் விளையாட்டு திடலில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.
- சேவல் சண்டை போட்டியில் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்த 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தங்கனூர் விளையாட்டு திடலில் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது
இந்த சேவல் சண்டை போட்டியில் தமிழகம் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களைச் சேர்ந்த 1000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
சேவல் சண்டை போட்டிகளில் சேவல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சூழல், சூதாட்டப் புகார் உள்ளிட்ட காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேவல் சண்டை போட்டிகளை நடத்த, சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றுள்ளனர்.
இந்த சேவல் சண்டை போட்டி இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும்.
இதில் சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி பூண்டி வட்டார கால்நடை மருத்துவர்கள் கொண்டு கால்நடை மருத்துவர்களின் பரிசோதனை, போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் புதுச்சேரி கன்னியாகுமாரி பாம்பே நெல்லூர் விஜயவாடா பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்றன.
இதில் நூரி, கதர், ஜாவா, யாகூத், கீரி, பீலா, கிளிக்கொண்டை, வெள்ளைக்கொண்டை, முள்ளு சேவல் உள்ளிட்ட பல வகையான சேவல்கள் பங்கேற்றன.
மூன்று நாள் போட்டிகளில் தொடர் வெற்றி பெறும் சேவலுக்கு முதல் பரிசு 2 லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனமும் இரண்டாம் பரிசு ஒரு லட்சம் மதிப்பிலான இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது.
இதற்காக திருவள்ளூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தர் சுக்லா தலைமையில் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், சப் இன்ஸ்பெக்டர் மாலா மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.